Thursday, January 8, 2015

வெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)






இதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார், இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார்,மேலும் இந்த வெள்ளைக்கார துரை வெற்றி வாகை சூடும் துரை என்றெல்லாம் தினமலரில்  படிச்சதுனால, சரி இந்த படம் ரொம்பபப.... நல்லாயிருக்கும் போலன்னு நினைச்சு போன வாரம் இந்த படம் பார்த்தேன். காமெடி படம்னு சொல்லி நம்ம பொறுமையை ரொம்பவே சோதிச்சிட்டாங்க. பாதி படத்துக்கு மேல பார்க்க வேண்டாம் என்று தான் நினைத்தேன், சரி, ஸ்ரீதிவ்யாவோட கடந்த கால கதையாவது நல்லா இருக்கும்னு நம்பி மிச்ச படத்தையும் பார்த்து முடிச்சு, ரொம்பவே கடுப்பாகிட்டேன். எப்படி இப்படி ஒரு படத்துக்கு தினமலர் ஆஹா,ஓகோன்னு எழுதியிருக்காங்கன்னு தெரியலை. அப்புறம் தான் இணையத்துல  இந்த படத்தோட விமர்சனத்தை தேடி படிச்சேன்.  ஆஹா,இந்த விமர்சனங்களை எல்லாம் மின்னாடியே படிச்சிருந்தா, இந்த படத்தை பார்க்காம தப்பிச்சிருக்கலாமேன்னு நினைச்சேன். ஓகே, என்னுடைய புலம்பலை நிறுத்திக்கிட்டு இந்த படத்தோட கதைக்கு வரேன்.
வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்யும் வட்டி வரதனிடம் (ஜான் விஜய்) 15லட்ச ரூபாய் கடன் வாங்கி,அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் விக்ரம் பிரபுவும்,சூரியும். அந்த கடனை அடைக்க முடியாமல் வட்டி வரதனிடம் அடிமையாக சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் சின்னம்மாவான ஸ்ரீதிவ்வா மீது விக்ரம் பிரபுவிற்கு காதல் பிறக்கிறது. இந்த அடிமை வாழ்விலிருந்து எவ்வாறு தப்பித்து தன்னுடைய காதலியை கைப்பிடித்தார்  என்பது தான் கதை.



இப்படிப்பட்ட ஒரு கதையில்,நகைச்சுவையை மட்டுமே நம்பி திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் எழில்.  பொதுவாக நகைச்சுவைப் படங்களில் லாஜிக் பார்க்க முடியாது தான் ஆனால் அதற்காக நகைச்சுவை என்ற பெயரில் கதைக்கு சம்பந்தமே இல்லாத, கோமாளித்தனமான காட்சிகளை எல்லாம் வைத்து நமக்கு நகைச்சுவைக்கு பதில் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறார்கள்.



ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். ஒரு காட்சியில், ஜான் விஜய், சூரியிடம் ஒரு வட்டிக்கனக்கு புத்தகத்தை கொடுத்து அதில் ஒருவனுடைய வட்டிக் கணக்கை படிக்கச் சொல்லி,அதை விக்ரம் பிரபுவை வேற ஒரு நோட்டில் எழுதச் சொல்லுவார் (ஒரு நோட்டில் இருப்பதை இன்னொரு நோட்டில் எதற்கு எழுதணும்? அதற்கு தகுந்த காரணங்களும் கிடையாது). அந்த நேரம் பார்த்து சின்னம்மாவான  ஸ்ரீதிவ்வா மாடியிலிருந்து கீழே இறங்கி வருவார். சூரி கணக்கைப் படிக்க, விக்ரம் பிரபுவும் ஸ்ரீதிவ்வாவைப் பார்த்துக்கொண்டே எழுதுவார். ஒரு கட்டத்தில், சூரியை விக்ரம் பிரபுவிடமிருந்து நோட்டை வாங்கி படிக்கச் சொல்லுவார்கள். அதில்,விக்ரம் பிரபுவோ வெறும் கவிதையாக(?) கிறுக்கி வைத்திருப்பார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சூரி, தான் சொன்ன கணக்கை ஞாபகம் வைத்துக்கொண்டு எப்படியோ படித்து முடித்து, அந்த பேப்பரை கிழித்து வாயில் போட்டுக்கொள்ளுவார். இந்த காட்சி எதற்காக வைத்தார் என்ற காரணத்தை இயக்குனருக்கே தெரியுமா என்று தெரியாது. எதோ ஓரிரு காட்சிகள் என்றால் பரவாயில்லை, படம் முழுக்க இந்த மாதிரி தான் நிறைய காட்சிகள் ஏன் வைக்கப்பட்டது என்று புரிந்து கொள்ள முடியாது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் அந்த கவிதை விக்ரம் பிரபுவிற்கும்,சூரிக்கு மட்டுமே தெரிந்த விஷயம், ஆனால் விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யாவை பார்க்கும்போது,அவர் மிகச் சரியாக அந்த கவிதையை கூறுவார். கடவுளே தாங்க முடியாது.



இதுக்கு நடுவுல இந்த காமெடி கதையில ஒரு ஊமையன் கதாப்பாத்திரம் வேற. அவர் சூரிக்கும் விக்ரம் பிரபுவிற்கும் நண்பனாகி,அவர்களோடு வட்டி வரதனிடம் மாட்டிக்கொள்வார். ஒரே ஒரு காட்சியில் மட்டும் அவர் தனியான ஒரு இடத்தில் அலைபேசியில் இந்தியில்  பேசுவார். கடைசியில் அவரை வட்டியின் ஆட்கள் அடித்தே கொன்று விடுவார்கள். அப்போது தான்  அவர் ஒரு சர்வதேச தீவிரவாதி என்றும் அவருக்கு 17மொழிகள் தெரியும் என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லுபவர்கள் வேறு யாரும் இல்லை சிபிஐ மற்றும் சர்வதேச போலீஸ் (interpol).  சிபிஐ அதிகாரிகள் மற்றும் இன்டர்போல் அதிகாரிகளும் நேராக வட்டியின் வீட்டிற்கு வந்து இதை சொல்லுவார்கள். அந்த தீவிரவாதியை கொன்றதற்காக வட்டிக்கு அரசாங்கத்திடமிருந்து 50லட்சம் ரூபாய் பரிசு வேறு. கொடுமை. கொடுமை. கிளைமாக்ஸ் காட்சியில் தீவிரவாதிகள் பழிவாங்குவதற்காக வருவதும், சூரியை மனித வெடிகுண்டாக,இல்லை இல்லை மனித ராக்கெட்டாக காண்பிப்பதும் அபத்தத்தின் அபத்தம்.

இடையில ஸ்ரீ திவ்யாவோட கடந்தகால கதை,அதுவும் உப்புச்சப்பு இல்லாத ஒரு கதை தான்.




இப்படி விமர்சனம் முழுக்க எதிர்மறை கருத்துக்களாகவே சொல்கிறாயே, நல்லதாக எதுவுமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு, "அம்மாடி உன் அழகு" என்ற பாட்டு கேட்க இனிமையாக இருக்கிறது. அப்புறம் ஸ்ரீதிவ்யா,படம் முழுக்க சேலையில் அழகாக தோன்றுகிறார். இந்த படத்துல ஒரே ஒரு ட்விஸ்ட் வேற உண்டு. உண்மையில எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்ன்னு தான் சொல்லணும் . அம்புட்டுத்தான் எனக்குத் தெரிஞ்ச நல்ல விஷயங்கள்.

பொதுவா நான் எந்த படத்துக்கும் இப்படி ஒரு விமர்சனம் கொடுக்க மாட்டேன். நான் இந்த படத்தை பார்த்து நேரத்தை வீணடித்த மாதிரி நீங்களும் வீணடித்து விடாதிர்கள் என்பதற்காக தான் இப்படியொரு விமர்சனம்.


26 comments:

  1. இந்தக் காலத்தில் நல்ல நகைச்சுவை எங்காவது கண்ணில் படுகிறதா, காதில் கேட்கிறதா என்ன?

    இரட்டை அர்த்த வசனங்கள், சிரிப்பே வராத அசட்டு ஜோக்குகள்.....

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.
      உண்மை தான் இன்றைக்கு இரட்டை அர்த்த வசனங்கள் தான் நகைச்சுவை என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. வணக்கம் நண்பரே எனக்கு பிரட்சினையில்லை காரணம் இவங்கே படமெல்லாம் இப்படித்தான் 80 எனக்குத்தெரியும் அதனால்தான் எவன் படமும் நான் பார்ப்பதில்லை டிவியில ஓசியில் கிடைப்பதைக்கூட பார்க்க மாட்டேன் ஆனால் ? நமது நண்பர்கள் பணம் வீணாகிவிடக்கூடாது என்ற தங்களின் நல்ல (?) எண்ணத்திற்க்கு என்னத்துக்கு ? நன்றி சொல்லணும்னு தோணுச்சு இருந்தாலும் கொஞ்சூண்டு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தமிழர்கள் எப்பொழுதும் தாராள மனம் படைத்தவர்கள். ஆனால் நீங்களோ பயங்கிற கஞ்சனாக அல்லவா இருக்கிறீர்கள்.
      என்னால் எல்லாம் படம் பார்க்காமல் இருக்க முடியாது.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  3. எங்களை தப்பிக்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்

      Delete
  4. எப்பவும் தூக்கம் வர தாமதமாகும் ,பசங்க டிவி யில் இந்த படத்தைப் போட்டார்கள் ,என்ன மாயமோ ,தூக்கம் அப்படி வந்தது !

    ReplyDelete
    Replies
    1. அட கடவுளே, அப்ப நீங்க இந்த படத்தை பார்க்கலையா ?

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி

      Delete
  5. ரைட்டு!! இன்னும் மூணு மாசத்துல சன் டி.வி ல போட்டுருவாங்க தானே:)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக போடுவாங்க.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  6. இப்படி ஒரு விமர்சனமா?
    "கும்கி" யானை துவம்சம் செய்ய
    சொக்கரே! உம்மை நோக்கி வருவதாக
    இன்று ஒரு தகவல்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ கும்க்கி யானையா?
      நல்லதுக்கே காலம் இல்லை போங்க...

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  7. நன்றி நண்பரே நன்றி
    தப்பித்தோம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  8. உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு விரைவில் இந்த படம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் எனத் தெரிகிறது. நடுநிலையான விமர்சனம்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  9. இத்திரைப்படத்தைப் பார்க்க விரும்பியவர்களுக்கு இப்பதிவு துணையாக இருக்கும். தப்பித்துக்கொள்வர். பார்த்தவர்கள் நிலை தங்களைப் போலத்தான் இருக்கும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  10. நான் மிக முக்கியமான படம் என்று நினைப்பவற்றை மட்டும் பார்க்கிறேன். மற்ற படங்களை நல்ல படம் என்று மற்றவர்கள் அதிகம் பரிந்துரைத்தால் மட்டுமே பார்க்கிறேன். அப்படியும் பல படங்கள் இன்னும் பார்க்கப் படாமலே இருக்கின்றன....

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான். இந்த படத்துக்கு கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை

      Delete
  11. அப்பாடா...! தொலைக்காட்சியில் போட்டால் கூட பார்ப்பதாக இல்லை...

    ReplyDelete
    Replies
    1. நல்ல முடிவு.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

      Delete
  12. மிக்க நன்றி சகோ!.அறியத்தந்தமைக்கு இனிமேல் பார்க்கும் உத்தேசம் இல்லை. இப்போதெல்லாம் படம் பார்ப்பது நன்றாக குறைந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. நேரம் பற்றாக்குறை தான். நான் இந்த படத்தை இரண்டு நாட்களாக பார்த்து முடித்தேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  13. புது படம் வந்தா பார்க்கனும் அப்படின்னு இருந்தேன். இனி பார்க்க வேண்டாம். விமர்சனத்துக்கு நன்றி

    ReplyDelete
  14. புது படம் வந்தா பார்க்கனும். அதவிட்டு ஏன் இந்த வேண்டாத வேலை. பக்கத்தில் இல்லை என்றதாலா?. அவன் அவன் காச போட்டு படம் எடுத்த இப்படியா? இப்படி எல்லாம் சொல்வேன் என்று நினைத்தீர்களா? சரி சரி இருந்துட்டு போகட்டும்.

    ReplyDelete