Thursday, July 3, 2014

ATM அட்டை இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்



 
ATM அட்டை இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்
 
இருபது வருடங்களுக்கு முன் நான் முதன்முதலாக வேலை பார்க்க ஆரம்பித்தபோது, சம்பளத்தை ஒரு கவரில் போட்டு கொடுத்தார்கள். அதற்கு பிறகு, சம்பளத்தை என்னுடைய வங்கிக்கணக்கில் சேர்த்தார்கள். அதனை நான் பணம் எடுக்கும் சீட்டையோ (withdrawl slip) அல்லது காசோலையையோ (cheque) பயன்படுத்தி அந்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்திருக்கிறேன். பிறகு வெளிநாட்டிற்கு சென்றபோது தான் இந்த “தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை (ATM)” பயன்படுத்த ஆரம்பித்தேன். முதன்முதலில் அந்த இயந்திரத்தை பயன்படுத்தியபோது, நான் அடைந்த ஆச்சிரியத்துக்கு அளவே இல்லை. இந்த இயந்திரத்துக்குள் ஒரு அட்டையை போட்டா, நமக்கு பணம் கிடைக்குதேன்னு தொழிநுட்ப வளர்ச்சியைக்கண்டு ரொம்பவே ஆச்சிரியப்பட்டிருக்கேன்.  சில நாட்களுக்கு முன்பு இங்கு “GET CARDLESS CASH” என்றொரு விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. அது பற்றி ஒரு நண்பரிடம் பேசிய போது தான், முழு தகவலும் தெரிந்து கொள்ள முடிந்தது. பொதுவாக நாம் இந்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு அதற்கான அட்டையை உபயோகப்படுத்துவோம். ஆனால், இந்த முறையில் அட்டையை பயன்படுத்தாமல் பணம் எடுக்க முடியும். நாம் அந்த அட்டையை (ATM card) கொண்டு வருவதற்கு மறந்து விட்டாலோ அல்லது யாருக்காவது உடனடியாக பணமாக கொண்டுக்க வேண்டும் என்றாலோ, இந்த முறை மிகவும் உதவியாக இருக்கிறது. இதனை முதலில் நானே சுயபரிசோதனை செய்து பார்த்தேன். மிகவும் எளிதாக அட்டை இல்லாமல் பணம் எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
     நம்முடைய அலைபேசியில் குறிப்பிட்ட வங்கியின் APPயை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் (இங்கு நான் சொல்லுவது CBA அதாவது common wealth bank of australia). அதில் “GET CARDLESS CASH” ஆப்ஷனை பயன்படுத்தி, நம்முடைய கணக்கிலிருந்து பணத்தை ATMக்கு அனுப்பிய பிறகு, கடவுட்சொல் (password) நம்முடைய அலைபேசிக்கோ, அல்லது நாம் கொடுத்த வேறொருவரின் அலைபேசிக்கோ வரும். அந்த கடவுட் சொல்லை பயன்படுத்தி தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில், பணம் எடுத்துக்கொள்ளலாம். மிகவும் முக்கியம் - முப்பது நிமிடத்திற்குள் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது.
     இந்தியாவிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்து விட்டதா என்று கூகிள் ஆண்டவரிடம் கேட்டபொழுது, “Bank of India” போன்ற ஒரு சில வங்கிகள் இம்முறையை பயன்படுத்துகின்றன என்று பதில் அளித்தார். அதில் ஒரு சின்ன வேறுபாடு என்னவென்றால், நாம் அடுத்தவருக்கு இம்முறையில் பணம் அனுப்ப விரும்பினால், அவருடைய அலைபேசி எண்ணையும், அவருக்கான வங்கி எண்ணையும் வங்கிக்கு இணையம் வழியாகவோ, அலைபேசி வழியாகவோ அனுப்பினால், அந்த நண்பரின் அலைபேசிக்கு வங்கி ஒரு கடவுட் எண்ணை அனுப்பும். அதனை பயன்படுத்தி அவர் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
     சரி, இன்றைக்கு அட்டை இல்லாமல் அந்த தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்க முடிகிறது, அடுத்து நம் கணக்கில் பணம் இல்லாமல், அந்த இயந்திரத்தில் பணம் எடுத்துக்கொள்ளக்கூடிய நாள் வெகு தூரம் இல்லை!!.

22 comments:

  1. புதிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சொக்கன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //சரி, இன்றைக்கு அட்டை இல்லாமல் அந்த தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்க முடிகிறது, அடுத்து நம் கணக்கில் பணம் இல்லாமல், அந்த இயந்திரத்தில் பணம் எடுத்துக்கொள்ளக்கூடிய நாள் வெகு தூரம் இல்லை!!. //

    ஆஹா...ஆஹா...கேட்கும் போதே...காதில் தேன் வந்து பாய்கிறது.

    ஓ..இப்படியெல்லாம் இருப்பதை தெரிந்து கொண்டோம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு காதில் தென் வந்து பாய்கிறதா!!! பாயும் பாயும்....

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  3. நல்ல தகவல். இந்தியாவில் icici வங்கியில் இந்த வசதி உள்ளது. நான் பயன்படுத்தியது இல்லை. கடன் அட்டையை பயன்படுத்தி வங்கி கணக்கில் பணம் இல்லாத போது நாம் பணம் எடுத்துக் கொள்ள முடியும்

    ReplyDelete
    Replies
    1. கடன் அட்டையை பயன்படுத்தி எடுத்த பணத்தை, நாம் திருப்பி கட்ட வேண்டுமே.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சோலையப்பன்.

      Delete
  4. விஞ்ஞானத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  5. கணக்கில் பணம் இல்லாமல் பணம் எடுக்கும் முறை ATM card வரும்போதே வந்து விட்டது நண்பரே... ஆம் கொள்ளையடிப்பவர்களுக்கு பணம் என்ன ? அக்கவுண்டே இல்லாமல் பணம் எடுத்துக்கொள்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம், கொள்ளையடிப்பவர்களுக்கு கணக்கே தேவையில்லை தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  6. மிகவும் பயனுள்ளத் தகவல்! இங்கும், இந்தியாவிலும் ஐசிஐ, பாங்க் அஃப் இந்தியா போன்ற வங்கிகளில் வந்துள்ளதுதான்....ஆனால் இங்கு அதனை சாதாரண மக்கள் உபயோகிக்கின்றார்களா என்று தெரியவில்லை....அறிவார்களா என்றும் தெரியவில்லை!

    சுரேஷ் சொல்லியிருப்பது போல் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அளப்பரியதுதான்!

    தொடர்கின்றோம்! தங்கள் வலைத்தளத்தை!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தொடர்வதை கண்டு மிக்க மகிழ்ச்சி.

      உண்மை தான். எல்லோரும் உபயோகிப்பார்களா என்பது சந்தேகம் தான். வங்கிப் பரிமாற்றத்துக்கு இணையத்தை பயன்படுத்துவது என்பதே மிகப்பெரிய விஷயமாகத்தான் இந்தியாவில் பார்க்கப்படுகிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. மிகவும் பயனுள்ளத் தகவல்.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  8. இதுவரை அறியாத புதுத் தகவல்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  9. விஞ்ஞானத்தின் வளர்ச்சி வியக்க வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

      Delete
  10. வியக்கவைக்கும் பயனுள்ள தகவல்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  11. இங்கும் natwest மற்றும் RBS ஆகிய வங்கிகளில் அந்த வசதி இருக்கு .


    //நம் கணக்கில் பணம் இல்லாமல், அந்த இயந்திரத்தில் பணம் எடுத்துக்கொள்ளக்கூடிய நாள் வெகு தூரம் இல்லை!//

    இதை பார்த்ததும் ஒன்று நினைவுக்கு வருகிறது இங்கே ஒருவர் நல்லா சோம பானம் அருந்தி விட்டு காஷ் மெஷினில் //free cash // என்று எழுதியுள்ளதை தவறா புரிந்துகொண்டு இலவசம்னு நினைச்சி மெஷினை தட்டி உடைச்சாராம் :)


    ReplyDelete
    Replies
    1. ஐயையோ, நான் அப்படியெல்லாம் அந்த இயந்திரத்தை உடைக்க மாட்டேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete