Saturday, September 7, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – ரோஸ் கொடுப்பதற்காக நிற்கும் காட்சியின் அடுத்த பகுதி


என்னால வேற ரெண்டு டேக் எடுக்கிற மாதிரி ஆயிடுச்சு. இதுக்கு எல்லாம் காரணம் அந்த சோடாபுட்டி கண்ணாடி தான்(?). முதல்ல ஃபிரேமூக்கு வெளியே போய் நின்னவுடனே, அந்த கண்ணாடியை எடுத்து போட்டுக்கிட்டேன். அப்பவே எனக்கு எல்லாம் மங்களா தான் தெரிஞ்சுது. சரி, எப்படியாவது சமாளிச்சுக்கலாம்னு நினச்சேன். இயக்குனர் அவுங்க அவுங்க இடத்துல வந்து நில்லுங்கன்னு சொல்லும்போது, நான் ஒரு குத்துமதிப்பாத்தான்,என் இடத்துல வந்து நின்னேன். அது கூட எப்படியோ சரியாத்தான் இருந்துச்சு (நான் தான் ஃபிரேமுக்கு வெளியே போக சொன்னவுடனே, கண்ணு தெரியாதவன் கணக்கு பண்ணி அடியெடுத்து வைக்கிற மாதிரி அடியெடுத்து பின்னாடி போய் நின்னேன்!!) அப்புறம் அங்க காமிராவிற்கு பக்கத்துல பார்க்க சொல்லும்போது தான் பிரச்சனையே. அந்த கண்ணாடியை போட்டுக்கிட்டு, அவுங்க சொல்ற இடத்துல பார்க்கிறதா நினைச்சுக்கிட்டு, வேற எங்கேயோ பார்த்திருக்கேன். ரெண்டு தடவை டேக் வாங்கினவுடனே,இயக்குனர் கிட்ட,”சார்,இந்த கண்ணாடியை போட்டுக்கிட்டு என்னால பார்க்க முடியலை, அதனால இதை கழட்டி சட்டில தொங்குற மாதிரி மாட்டிக்கிறேன்னு சொல்லி, அந்த குருட்டு கண்ணாடியை சட்டைல மாட்டிக்கிட்டு அடுத்த டேக்குல அவுங்க சொல்ற இடத்துல ஒழுங்கா பார்த்தேன். அந்த டேக்குக்கு போறதுக்கு முன்னாடி,ஒரு விஷயத்தை சொல்லணும். அதாவது விசில், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த காயத்ரி ரகுராம் இந்த படத்தில் ஒரு பாட்டிற்கு நடன இயக்குனராகவும், டைரக்க்ஷன் துறையில் இணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். அவரை காமிராவிற்கு பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு, இயக்குனர் எங்களிடம், அவர் தான் அமலாபால்ன்னு நினைச்சுக்கிட்டு அவரை பாருங்கள் என்று சொன்னார். காயத்ரி ரகுராமும் ஆக்க்ஷன் சொன்னவுடனே, கையை தூக்கி டாட்டா காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. நாங்களும் அவரை பார்த்துக்கிட்டு வந்து எங்க இடத்துல நின்னோம். அந்த காட்சி முடிஞ்சது. அப்புறம் நாங்க எல்லோரும், சந்தானத்துக்கு இருபுறமும் நிப்போம். அதுல ரெண்டு பேர் சந்தானத்துக்கு முன்னாடி நிப்பாங்க. சந்தானம் ஒரு ரெண்டு அடி நடப்பாரு, நாங்களும் ரெண்டு அடி நடக்கணும், அப்புறம் அவர் ஒரு அடி பின்னால வைப்பாரு, நாங்களும் பின்னாடி ஒரு அடி வைக்கணும். இது ஒரு காட்சி. இந்த காட்சியை எடுத்து முடிக்கிறதுக்கும் 4 டேக் ஆனது. இந்த காட்சில என்ன ஒரு காமெடின்னா, சந்தானத்துக்கு முன்னாடி நிற்கும் ரெண்டு பேரில் ஒருவர் சந்தானம் பின்னாடி ஒரு அடி எடுத்து வைப்பது தெரியாமல், அவர் பாட்டுக்கு முன்னாடி போயிக்கிட்டு இருந்தாரு. நாங்க எல்லோரும் ரெண்டு அடி எடுத்து வச்சு, ஒரு அடி பின்னாடி வருவோம்,ஆனா அந்த நண்பர் மட்டும்,”கருமமே கண்ணாயினார்” மாதிரி, மின்னாடி நடக்க ஆரம்பிச்சு, ஃபிரேமுக்கு வெளியே போயிட்டாரு. அப்புறம் மறுபடியும் ஒரு டேக். இதனால சந்தானம் ரொம்ப டென்ஷன் ஆகி, எங்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு. என்னன்னா, முதல்ல இடது காலை முன்னாடி வைங்க,அப்புறம் வலது காலை முன்னாடி வைங்க. கடைசில திரும்பவும் இடது காலை பின்னாடி வைங்கன்னு எங்களுக்கு பாடம் எடுத்தாரு. கடைசியா அந்த காட்சியையும் எடுத்து முடிச்சாங்க. அடுத்த காட்சி தான் வசனம் பேசுற காட்சி. 



என்னோட வசனம், “என்னது! உன் லவ்வர்ரா !!!!” இது மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு வரி வசனங்கள். ஒரே ஷாட்ல அந்த வசனம் பேசுற காட்சியை எடுத்தாங்க. ஆனா அதுக்கும் ஒரு 4 டேக் போணுச்சு. அப்பாடா, ஒரு வழியா இந்த ஸீன் முடிஞ்சுதுன்னு நினைச்சோம். ஆனா இன்னொரு ஆங்கில்ல எடுக்கணும்னு காமிராவை வேற ஒரு பக்கம் வச்சு, மறுபடியும் முதல்லேருந்து எடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா இந்த தடவை நிறைய டேக் வாங்கலை(எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்டோம் இல்ல!!!). 9.30 மணிக்கு இந்த ஸீனை எடுக்க ஆரம்பிச்சு, 12.30மணிக்கு முடிச்சாங்க. கடைசில இயக்குயனர் எங்க கிட்ட வந்து, ரொம்ப நல்ல பண்ணினீங்க. ரொம்ப நல்லா வந்திருக்கு. அப்படி இப்படின்னு எங்களுக்கு பெரிய ஐஸ் வச்சாரு. இதை கேட்டுக்கிட்டு இருந்த சந்தானம் என்ன நினைச்சாருன்னு தெரியலை. உடனே ஆமா, ஆமா 400 டேக் வாங்கி ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்கன்னு திருப்பி சொன்னாரு. இதை கேட்டுக்கிட்டு இருந்த என் நண்பர் ஒருத்தருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு, அவர் சந்தானத்தை பார்த்து, ஏன் சார், நாங்க என்ன 400 டேக்கா எடுத்தோம். காமிரா முன்னாடி நிக்கிறது எங்களுக்கு இது தான் முதல் அனுபவம், ஏதோ கொஞ்சம் டேக் வாங்கி நடிச்சிருக்கோம், அதுக்குள்ள நீங்க 400,500 டேக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களேன்னு சொல்லி கோபப்பட்டாரு. இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த இயக்குனர், உடனே உள்ள புகுந்து, நீங்க யாரும் போயிடாதீங்க, இன்னும் ஒரு காட்சி ரெஸ்டாரண்ட் உள்ளுக்குள்ள எடுக்கணும், அதனால போய் காஸ்ட்யூம் மாத்திக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு. 

தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி

-    இன்னும் சொல்கிறேன்


No comments:

Post a Comment