Wednesday, June 26, 2013

நாயாக பிறந்திருக்க வேண்டியவர்

சிலர் மோப்பம் பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்களை பார்த்து நீ, நாயா பிறந்திருக்க வேண்டியவன், தப்பி மனிதனா பிறந்துட்ட என்று வேடிக்கையாக கூறுவதுண்டு. அதேமாதிரி, நகைச்சுவை துணுக்குகளில் கூட, “நான் அடுத்த ஜென்மத்திலையாவது நாயா பிறக்கணும், ஏன்னா என் மனைவி நாய்க்கு தான் பயப்பிடுறான்னு” சொல்வதுண்டு. என்ன தான் வேடிக்கையாக மனிதனை நாயோடு ஒப்பிட்டு பேசினாலும், சிலருக்கு நாயின் மீது அளவு கடந்த அன்பும்,பாசமும் இருக்கு. அதன் வெளிப்பாடாக, அவர்கள் நாய்களை தங்கள் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். ஆனால் இன்று பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தியை,என்னால் ஜீரணிக்கவே முடியலை. அதுவும் நாய் சம்பந்தப்பட்ட செய்தி தான். பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு நாயின் மீது, அப்படி என்ன தான் ஒரு காதலோ(கருமாந்திரமோ!!), தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் இறந்த நாயின் முகத்தைக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனராம். இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள். இவர் தான் உண்மையிலேயே நாயாக பிறந்திருக்க வேண்டியவர், தப்பி மனிதனாக பிறந்து விட்டார். அவருடைய புகைப்படத்தை கீழே பாருங்கள் (இரவு நேரங்களில் இந்த புகைப்படத்தை பார்த்து, பயந்தால், நான் பொறுப்பில்லை).



1 comment:

  1. சும்மா காமெடி பண்ணாதீங்க ... இது சாத்தியமில்லை .... தவறான செய்தி .... நாயின் உடல் உறுப்புகளையெல்லாம் மனித உடல் ஏற்றுக்கொள்ளாது சாமியோவ்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete